search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி படுகாயம்"

    • விவசாய வேலைக்காக சென்ற போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காளி வட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் இருந்து விவசாய வேலைக்காக டிராக்டரை ஒட்டிக்கொண்டு பூங்குளம் நோக்கி சென்றார். அப்போது பூங்குளம் ரைஸ் மில் அருகே டிராக்டர் நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் டிராக்டரை ஓட்டி சென்ற நவீன்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் நவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் தூக்கி வீசியது.
    • ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை பகுதியை சேர்ந்தவர் தவசியப்பன் (68). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். அத்துடன் கால்நடை களையும் வளர்த்து வருகின்றார்.

    இதில் 20 ஆடுகளை வளர்த்து வரும் தவசியப்பன் இவரது தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து வருவது வழக்கம்.

    அதேபோல் சம்பவத்தன்றும் விளாங்குட்டை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாலை நேரத்தில் ஆடுகளை மேய்க்கச் அழைத்து சென்று ள்ளார். அவருடன் மற்ற நபர்களும் ஆடு மேய்ப்பதற்கு உடன் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் தவசியப்பன் பின்னால் வந்த ஒற்றை காட்டு யானை அவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது.

    இதனையடுத்து யானை அவரை தாக்க வருவதற்குள் அவருடன் வந்தவர்கள் தகர டின்னில் சப்தம் ஒலி எழுப்பியதை கேட்டு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    பின்னர் அவருடன் வந்த நபர்கள் அவரது மகன் ரவிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து தவசியப்பன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    யானை தூக்கி வீசப்பட்டதில் விலா எலும்பு, கழுத்து பகுதியில் எலும்பு முறிவு மற்றும் சிராய்ப்பு காயங் களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

    சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் பர்கூர் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அம்மாசி என்ற விவசாயியை எதிர்பாராதவிதமாக யானை தாக்கியது.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி, 

    கிருஷ்ணகிரி அருகே சோக்காடி பகுதியில் இன்றுகாலை ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்தது.

    அந்த யானை அங்குள்ள விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. அப்போது அம்மாசி என்ற விவசாயியை எதிர்பாராதவிதமாக யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். அப்போது விவசாயியை தாக்கிய ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றார்.
    • விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு காஞ்சிபுரம் கோவில்பத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது தந்தை துரைசாமி(வயது53). விவசாயியான துரைசாமி, நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் காரைக்கால் முள்ளியம்மாள் வாய்க்கால் ஓரம் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த நெடுங்காடு கீழ்பொன் பேத்தியைச்சேர்ந்த சுப்பிரமணியனின் 17 வயது மகன் மோதினார். இதில், துரைசாமி மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்தார். தகவல் அறிந்த வேல்முருகன், தந்தையை காரைக்கால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர், சிறுவனிடம் மோட்டார் சைக்கிளை கொடுத்து, விபத்தை ஏற்படுத்திய, சிறுவனின் பெரியப்பா மூர்த்தி(55) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, காரைக்கால் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • லாரி மீது பைக் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி புள்ளான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன் (வயது 54) விவசாயி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சென்றாயன் தனது பைக்கில் பொன்னேரி ஏலகிரி மலை கூட்டுரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலை உள்ள தடுப்பு மீது மோதி எதிரே வாணியம்பாடி இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரி மீது மோதியதில் பலத்த படுகாயம் அடைந்தார். இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து லாரி டிரைவர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×